செய்திகள்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம்

மின் தேவை குறைவு காரணமாக வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் நாளொன்றுக்கு மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யபடுகின்றன.

முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மின் தேவை குறைவு காரணமாக முதல் நிலை மூன்றாம் அலகில் உற்பத்தி செய்யபட்டுவந்த 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன.

இதே போல் இரண்டாம் நிலை முதல் அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன.

முதல் அலகின் இரண்டு அலகுகளில் 420 மெகாவாட் இரண்டாம் அலகில் 600 மெகாவாட் மொத்தம் 1020 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகின்றன.