செய்திகள்

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

வட சென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டாவது நிலை 2-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் உள்ள ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது நிலை 2-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மிகை மின் உற்பத்தி காரணமாக 2-வது அலகில் பணிகளை நிறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT