செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திபட்டுபுதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்நிலை மூன்றாம் அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

2-வது நிலை இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 810 மெகாவாட் நிறுத்தபட்டுள்ளன. பழுதினை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT