கைது 
செய்திகள்

நொளம்பூரில் கொள்ளையன் கைது

நொளம்பூரில் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் நொளம்பூர் சாலையில் தள்ளுவண்டி கடை வைத்துள்ளார். அவரிடம் சாப்பிட்டு விட்டு காசு தராமல் தள்ளு வண்டியை அடித்து உடைத்ததாக நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ் என்கிற மாட்டு ரமேஷ் என்பதும் நொளம்பூர் பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 21 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT