சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் TA-1042, TA-1005 மற்றும் TA-1009 என பல்வேறு மாடல்களில் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் TA-1005 மாடல் அமெரிக்காவன் FCC மூலம் சான்று பெற்றிருக்கிறது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 5.5 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் OLED ரக டிஸ்ப்ளே கொண்ட முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும். இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 12 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
3250 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சாம்சங்கின் 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் ஆஸ்பெக்ட் ரேஷியோ சார்ந்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
எனினும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவாட் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதில் 18:9 ரக ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என்றும் இது ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்படுமா அல்லது முன்பக்கம் வழங்கப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.