செய்திகள்

இந்தியாவில் நோக்கியா 8: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி வெளியகியுள்ளது. நோக்கியா நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள விழா அழைப்பிதழில் வெளியீட்டு தேதி இடம்பெற்றுள்ளது.

மாலை மலர்

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. நோக்கியா சார்பில் அனுப்பப்பட்டுள்ள விழா அழைப்பிதழில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனுடன் நேரடி போட்டியாக அமைந்துள்ள நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 8 விலை EUR 599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 6000-சீரிஸ் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளாஸி பாலிஷ்டு காப்பர் மற்றும் பாலிஷ்டு ப்ளூ, மேட் டெம்ப்பர்டு ப்ளூ மற்றும் ஸ்டீல் ஃபினிஷ் நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 8 IP54 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0 RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரே சமயத்தில் முன்பக்க கேமரா மற்றும் பிரைமரி கேமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு கேமராக்களில் ஒரே சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக மாற்றுவதோடு, நோக்கியா 8 கேமரா ஆப் இரண்டு படங்களையும் போத்திசை (bothies) ஃபுல் எச்டி வீடியோக்களை பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரலையாக ஸ்ட்ரீம் செய்ய முடியும். முன்பக்கம் 13 எம்பி RGB கேமரா மற்றும் இரண்டு கேமராக்களும் 4K தரம் கொண்ட வீடியோக்களும் பதிவு செய்யும். பின்புற கேமராக்களில் லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.  

5.3 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு விரைவில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.