செய்திகள்

அசத்தல் அம்சங்களுடன் நோக்கியா 6 2018 அறிமுகம்

எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

பீஜிங்:

நோக்கியா நிறுவனம் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. 

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா 6 (2018) ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

டூயல்-சைட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் ஒரே சமயத்தில் முன்பக்கம் மற்றும் பிரைமரி கேமராக்களில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை படமாக்க முடியும். யுனிபாடி வடிவமைப்பு மற்றும் 6000 சீரிஸ் அலுமினியம் சேசிஸ் வழங்கப்பட்டுள்ளது. 

நோக்கியா 6 (2018) சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 

- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630

- அட்ரினோ 508 GPU

- 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆணட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட்

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0

- 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்

- கைரேகை ஸ்கேனர்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் புதிய ஸ்மார்ட்போனின் 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 1499 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,655, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 1699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,610 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 6 (2018) சர்வதேச வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை.