மாஸ்கோ:
ரஷ்யாவை சேர்ந்த மொபைல் போன் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனம் கேவியர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பையொட்டி நோக்கியா 3310 (2017) பதிப்பு ஸ்பெஷல் எடிஷன் மொபைல் போனினை வெளியிட்டுள்ளது.
புதின்-டிரம்ப் சம்மிட் எடிஷன் நோக்கியா 3310(2017) தங்க முலாம் பூசப்பட்ட நாணயம் கொண்டுள்ளது. வட்ட வடிவிலான தங்க நாணயத்தில் புதின் மற்றும் டிரம்ப் ஆகியோரின் முகங்கள் பதிக்கப்பட்டுள்ளன. புதிய ஸ்பெஷல் எடிஷன் போனின் விலை 2468 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 3310 (2017) ஆடம்பர புதின்-டிரம்ப் பதிப்பு டைட்டானியம் மற்றும் பிளாக் வெல்வெட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான நோக்கியா 3310 (2017) பதிப்பை விட இது அதிக உறுதியாக இருக்கிறது. எச்.எம்.டி. குளோபல் வழங்கிய அதே ஹார்டுவேர் பாகங்களை உள்புறம் கொண்டுள்ள ஆடம்பர பதிப்பில் பல்வேறு விலை உயர்ந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நோக்கியா 3310 (2017) சிறப்பம்சங்கள்:
* சீரிஸ் 30+ இயங்குதளம்
* 2.4 இன்ச் QVGA, 240x320 பிக்சல் டிஸ்ப்ளே
* டூயல் சிம் ஸ்லாட்
* 2 எம்பி பிரைமரி கேமரா
* 16 எம்பி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 1200 எம்ஏஎச் பேட்டரி
* மைக்ரோ சிம் ஸ்லாட், ப்ளூடூத்
* மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
ஒரு முறை சார்ஜ் செய்து நாள் முழுக்க பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய நோக்கியா 3310 போனில் கேமரா, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகளுடன் நவீன வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது. பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்த அப்டேட்டெட் நோக்கியா 3310 அதன் பிரான்டு மதிப்பு ஆடம்பர பதிப்பை வாங்க தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.