செய்திகள்

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இணையத்தளத்தில் நோக்கியா 3 விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

புதுடெல்லி:

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் தற்சமயம் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3 இதுவரை ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்கதியாவில் ரூ.9,499 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 3 கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள நோக்கிா 3 பாலிகார்பனைட் பேக்பேனல், அலுமினியம் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நோக்கிய 3 ஸ்மார்ட்போன் டாடா நிறுவனத்தின் க்ரோமா தளத்தில் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


நோக்கியா 3 சிறப்பம்சங்கள்:


* 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே

* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

* 2650 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நோக்கியா 5, நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.12,899 மற்றும் ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 6 முன்பதிவுகள் அமேசான் தளத்தில் ஜூலை 14-ந்தேதி துவங்க இருக்கிறது.