புதுடெல்லி:
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை, மற்றும் விற்பனை சார்ந்த முழு விவரங்களை நோக்கியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாரு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 6 விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் என்றும் ஜூலை 14-ந்தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 பாலிகார்பைனேட் பாடி மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 3 சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 2650 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 16-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் நோக்கியா 3 ஆஃப்லைன் சந்தைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:
* 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.12,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ஜூலை 7-ந்தேதி துவங்கும் என்றும் ஆஃப்லைன் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D விளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
* ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
* 3 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் நோக்கியா 6 விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6 முன்பதிவு ஜூலை 14-ந்தேதி துவங்கும் என்றும் அமேசான் பே மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.1000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.