நாடு மழுவதும் கொரோனா பரவல் உள்ளதால் மக்கள் வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மால்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஓட்டல்கள் என திறக்கப்பட்டபோதிலும், அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு இடங்களில் இந்த கட்டுப்பாடு மீறப்படுகிறது.
அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குட்டு பண்டிட், கேட் வெட்டினார். அப்போது சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு நின்றனர். முக கவசமும் அணியவில்லை. இதுதொடர்பான வீடியோ பண்டிட்டின் பேஸ்புக்கில் வெளியானது.
முன்னாள் எம்எல்ஏ குட்டு பண்டிட் பொது இடத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி முன்னாள் எம்எல்ஏ குட்டு பண்டிட் விளக்கம் அளித்துள்ளார். நொய்டாவில் இருந்து சென்றுகொண்டிருந்தபோது ஆதரவாளர்கள் தனது காரை அடையாளம் கண்டு நிறுத்தி கேட்டுக்கொண்டதால், கீழே இறங்கி கேக் வெட்டியதாகவும், அப்போதுகூட அவர்களுக்கு அறிவுறுத்திவிட்டு வந்ததாகவும் பண்டிட் தெரிவித்தார்.