செய்திகள்

ஆசிரியர்கள் தொந்தரவால் 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- நொய்டாவில் பரபரப்பு

நொய்டாவில் ஆசிரியர் தொந்தரவு கொடுத்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அப்பகுதியில் உள்ள அல்கான் பப்ளிக் பள்ளியில் பயின்று வந்தார். அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மாணவியிடன் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் பயந்து போன மாணவி தனது தந்தையிடம் இதை கூறியுள்ளார். ஆனால், அவரது தந்தை இதைப்பற்றி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆசிரியர் தெரியாமல் செய்திருப்பார் என கூறியுள்ளார்.

இருப்பினும் நான் நன்றாக தேர்வு எழுதினாலும், ஆசிரியர் கண்டிப்பாக எனக்கு மதிப்பெண்கள் குறைவாக அளிப்பார் என மாணவி கூறினார். அவர் பயந்த படியே ஆசிரியர் மாணவியை தேர்வில் தோல்வியடை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன் மகளின் மரணத்திற்கு பள்ளி ஆசிரியர்களே காரணம் என மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.#tamilnews

SCROLL FOR NEXT