செய்திகள்

இந்த ஆண்டு புதிய பி.எட். கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

புதிய பி.எட். கல்லூரிகள் திறக்க இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மாலை மலர்

புதிய பி.எட். கல்லூரிகள் இந்த ஆண்டு திறக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

பி.எட். கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இன்று பணம் கொடுத்தால், நாளை பட்டம் கொடுத்து விடுகிறார்கள். ஆசிரியர் பயிற்சியின் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டி இருப்பதால், இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டி இருக்கிறது. எனவே, இந்த ஆண்டு புதிய பி.எட். கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் பி.எட். கல்லூரிகள், தர ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். பி.எட். மற்றும் டி.டி.எட். படிப்புகளில், செய்முறை பயிற்சியின் தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில், அங்குள்ள ஆசிரியர்கள் மேற்பார்வையில் செய்முறை பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த பயிற்சி குறித்து அங்குள்ள மாணவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.