செய்திகள்

இந்திய கிரிக்கெட்டில் நான்கு நாள் டெஸ்டிற்கு வாய்ப்பே இல்லை: பிசிசிஐ

ஐ.சி.சி. நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை பரிசோதனை முறையில் நடத்த அனுமதி வழங்கியதில் இந்தியாவிற்கு விருப்பமில்லை.

மாலை மலர்

பின்னர் டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கான ஆதரவு மங்க ஆரம்பித்து வருகிறது. ஆஷஸ் தொடர் போன்ற முக்கியமான தொடரைத் தவிர மற்ற போட்டிகளை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் விரும்பவில்லை.

அதேசமயத்தில் தற்போதைய சூழ்நிலையில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களும் இல்லை. ஆடுகளம் இரு அணிகளுக்கும் சாதகமான வகையிலும் அமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் முழுவதும் நடைபெறவில்லை. நான்கு நாட்களுக்குள்ளேயே வெற்றி தோல்வி தெரிந்துவிடுகிறது.

ஏதாவது ஒன்றிரண்டு போட்டிகள் மட்டுமு ஐந்து நாட்கள் முழுவதுமாக நடைபெறுகிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்கள் கொண்டதாக குறைக்கப்படலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது.

இதற்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆக்லாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி. கூட்டத்தில் பரிசோதனை முறையில் நான்கு நாட்கள்  கொண்ட டெஸ்ட் போட்டியை நடத்த ஒப்பதுல் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் முதல் டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ‘பாக்சிங் டே’ என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாள் தொடங்கும் போட்டியில் மோதுகிறது. ஆனால் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிற்கு வாய்ப்பில்லை என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.