வருமான வரி 
செய்திகள்

வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முந்தைய நிலையே தொடரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ரூ.2.5 லட்சம் என்ற நிலையிலேயே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வருமான வரி விதிப்பு மாற்றப்படவில்லை.

ஆனால், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு (5 சதவீத கழிவு) என அறிவிக்கப்பட்டது. ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.