செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: முக்தார் அப்பாஸ் நக்வி

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழ்நிலை இல்லை என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது ஜுனைத் கான் என்ற சிறுவன், அவரின் சகோதரர் ஹசீப் மற்றும் 2 உறவுக்கார சிறுவர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு துணிமணிகளை வாங்க டெல்லிக்கு வந்திருந்தனர். அதன்பின், சொந்த ஊருக்கு திரும்ப டெல்லி - பல்லப்கார் பயணிகள் ரயிலில் துக்லகாபாதில் ஏறினர்.

அப்போது, அவர்கள் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 20 பேர் கொண்ட ஒரு கும்பல் 4 சிறுவர்கள் மீதும் கத்தி, கூர்மையான ஆயுதங்களால் திடீர் தாக்குதல் நடத்தியது. மேலும், அவர்களை மதுரா செல்லும் வழியில் உள்ள அசாவதி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியது. இதில் படுகாயமடைந்த ஜூனைத் கான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இந்தியாவில் சிறுபான்மை மக்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனக்கூறியும், சிறுவனின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ராஜஸ்தான், அரியானா, ஜார்க்கண்ட் உள்பட பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.