என்எல்சி விபத்து 
செய்திகள்

என்எல்சி பாய்லர் விபத்து- மேலும் தொழிலாளி உயிரிழப்பு

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்:

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ந்தேதி பாய்லர்  வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று உயிரிழந்தார். இதனால் என்எல்சி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள்,  9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்எல்சி நிர்வாகம் 30 லட்ச ரூபாய் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT