செய்திகள்

சஞ்வான் தாக்குதலுக்கு பாக். தகுந்த விலை கொடுக்க நேரிடும் - நிர்மலா சீதாராமன்

ஜம்மு காஷ்மீரில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். #SunjwanAttack #Kashmir

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியான கென்னி என்ற இடத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பொதுமக்களை வெளியேற்றிவிட்டு தாக்குதலை தொடங்கினர். 

27 மணிநேரத்திற்கும் நடந்த இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இதேபோல, ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் முகாமில் இன்று காலை புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு வீரர் பலியாகியுள்ளார். இந்த இரு தாக்குதல்களுக்கும் லஷ்கர் இ தாய்பா இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இன்று ஜம்மு மாலை சென்ற பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை அடுத்து, அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தியுடன் ஆலோசணை நடத்தினார். #SunjwanArmyCamp #SunjwanAttack #TamilNews

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற அசார் மசூத் இயக்கமான ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 4 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், மூன்று பேர் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தகுந்த விலை கொடுக்க நேரிடும்

என தெரிவித்தார்.