செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம்- மதுரை பல்கலை. பேராசிரியை விஜயாவிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவியின் பாலியல் அழைப்பு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை விஜயாவிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.#NirmalaDeviAudo #CBCIDInvestigatesVijaya

மதுரை:

மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி பேராசிரியர் முருகனை கைது செய்து பின்னர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் சிக்கினார்.

அருப்புக்கோட்டையில் உதவி பேராசிரியர் முருகனிடம் 4-ம் நாளாக இன்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்றது. இதேபோல் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் 3-ம் நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதற்கிடையே நிர்மலாதேவி விவகாரம் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை விஜயாவிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பல்கலைக் கழகத்தில் புத்தாக்க பயிற்சியின்போது நிர்மலாதேவிக்கு பேராசிரியை விஜயா பயிற்சியாளராக இருந்தவர் என்பதால் அவரிடம் விசாரிக்கப்பட்டு தகவல் சேகரிக்கப்படுகிறது. #NirmalaDeviAudo #CBCIDInvestigatesVijaya

SCROLL FOR NEXT