செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜரானார். #nirmaladevi

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

ஓராண்டுக்குப்பின்னர் கடந்த 12-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். இதற்காக அவர் தனியாக காரில் வந்தார். செய்தியாளர்களை பார்த்தவுடன் “பேசக் கூடாது” என்று வாயில் கையை வைத்து சைகை செய்தபடி கோர்ட்டுக்குள் சென்றார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓராண்டாக கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று அவர் தனியாக காரில் வந்தது வித்தியாசமாக இருந்தது. நிர்மலாதேவி விடுதலையானபோதும் இதுவரை அவரை குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. #nirmaladevi 

SCROLL FOR NEXT