கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அரிய வகை நிபா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதல் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பரவலாக உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவ்வால்களால் பரவும் இந்த நிபா வைரஸ், மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்குவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைச்சாவு ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.