செய்திகள்

பீகாரில் சரக்கு ரெயில் மோதி 9 பேர் பலி

பீகார் மாநிலத்தில் சரக்கு ரெயில் மோதி தண்டவாளத்தில் நடந்து சென்ற 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

பாட்னா:

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள சிராய் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கிய சிலர் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த ஒரு சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.