செய்திகள்

திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் பீவார் பகுதியில் உள்ள ஓட்டலில் திருமண விழா நேற்று இரவு நடைபெற்றது. அந்த விழாவில் 2-வது மாடியில் உள்ள சமையல் கூடத்தில் சமையல் வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஓட்டல் சேதமடைந்தது என்றும் அருகிலுள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். #tamilnews