காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்கும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்னகாதி செக்டார் அருகே இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக குண்டுகளால் இந்திய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக எல்லைப்பாதுகாப்பு படை துணை கம்மாண்டர் மனிஷ் மேஹ்தா தெரிவித்துள்ளார். கடந்த 72 மணி நேரத்தில் 9 வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.