ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2018ம் ஆண்டிற்கான இரண் டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10மணிக்கு ஊட்டி சேரிங்கிராஸ் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள அரசு கலை கல்லூரி யில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர் காலை 9 மணிக்குள் அழைப்பு கடிதத்துடன் தேர்வு நடை பெறும் கல்லூரிக்கு வர வேண்டும். விண்ணப் பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா எடுத்து வர வேண்டும். இந்த பொருட்கள் தவிர வேறு எதுவும் எடுத்து வர அனுமதி இல்லை. செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்து வர அனுமதி இல்லை.
தேர்வு மையத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய வசதி இல்லாத காரணத்தால் தேர்வு எழுத வரும் நபர்களின் சொந்த வாகனங்கள் தேர்வு மையத்தில் நிறுத்துவது அனுமதிக்க பட மாட்டாது.
அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு தேர்வாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வாளர்களுடன் வேறு எந்த நபரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மாட்டாது.
தேர்வு நாளன்று 10.15 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வரும் தேர் வாளர்கள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.