நிலக்கோட்டை:
நிலக்கோட்டை கூவனூத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தமிழ்நாடு கூட்டுறவு சம்மேளன சங்கம்(சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கினார். இதில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாயவிலை கடை ஊழியர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜோதிபாசு, ரவிச்சந்திரன், ராஜா, சக்திவேல், சென்னித்துரை, வேலு, முருகேசன், சிங்கராஜா, மயில்சாமி, ஆறுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.