கொள்ளை 
செய்திகள்

நிலக்கோட்டை பகுதியில் விவசாய தோட்டங்களில் மின் மோட்டார் திருடும் மர்ம கும்பல்

நிலக்கோட்டை பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் மர்ம கும்பல் மின் மோட்டார்களை திருடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் தென்னந்தோப்புகளும் அதிக அளவில் உள்ளன. இப்பகுதி தோட்டங்களில் உள்ள மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் மின் மோட்டார்களை திருடும் கும்பல் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

மேலும் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் மற்றும் பைக்குகளையும் கும்பல் திருடி சென்றனர். இதேபோல் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்தும் கொள்ளை கும்பல் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. வெளியூர் செல்வதற்கும் தயங்கி வருகின்றனர்.

குறிப்பாக தோட்டத்தில் மின் மோட்டார் அதிக அளவு திருடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் சிக்க வில்லை. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT