செய்திகள்

நிலக்கோட்டை அருகே மில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

நிலக்கோட்டை அருகே மில்வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே மன்னவராதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது35) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரவணக்குமாரி(30). முசுவனூத்து பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறிச்சென்றுள்ளார்.

இரவு வெகுநேரமாகியும் சரவணக்குமாரி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குபதிவு செய்து இளம்பெண் குடும்ப பிரச்சினையில் வீட்டைவிட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.