செய்திகள்

ஆந்திர முதல் மந்திரியுடன் குமாரசாமி மகன் சந்திப்பு

ஆந்திராவில் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியை, கர்நாடக முதல் மந்திரியின் மகன் நிகில் குமாரசாமி அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.

மாலை மலர்

அமராவதி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவில் புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டியை, கர்நாடக முதல் மந்திரி மகன் நிகில் குமாரசாமி அமராவதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். 

ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த நிகில் குமாரசாமி, முதல் மந்திரியாக பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தார்.