செய்திகள்

டெல்லியில் ரூ.20 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - நைஜீரியா நாட்டவர் கைது

புதுடெல்லியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருளை விற்பனை செய்ய முயன்ற நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். #heroinsmuggling

மாலை மலர்

புதுடெல்லி:

புதுடெல்லியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருளை விற்பனை செய்ய முயன்ற நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ரிங் சாலை பகுதியில் ஹெராயின் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரியாவைச் சேர்ந்த ஒலிவர் சிசிகே இகேனசோ என்பவரை காவல்துறையினர் கைது செயதனர். அவரிடமிருந்து சுமார் 4 கிலோ அளவிலான 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி குஷ்வா தெரிவித்துள்ளார். #heroinsmuggling