செய்திகள்

நைஜீரியாவில் கூட்டுப் படை அதிரடி தாக்குதல்- 20 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

நைஜீரியாவில் பன்னாட்டு கூட்டுப்படை நடத்திய அதிரடி தாக்குதல்களில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

நைஜர்:

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் பன்னாட்டு கூட்டுப் படை தீவிரமாக களமிறங்கி உள்ளது.

அவ்வகையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் உள்ள லேக் சாட் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பன்னாட்டு கூட்டுப் படை அதிரடி தாக்குதல்களை நடத்தியது. அரேஜ், மால்கோனரி மற்றும் தும்பம் ரெகோ ஜெனரல் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த  தாக்குதல்களில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.  பன்னாட்டு கூட்டுப் படை தரப்பில் 4 பேர் காயமடைந்தனர்.

பன்னாட்டு கூட்டுப் படையில் நைஜீரியா, சாட், கேமரூன் மற்றும் நைஜர் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு படைகள் உள்ளன.