செய்திகள்

பவர்பிளேயில் சிறப்பாக பந்து வீசும் திறமை பெற்றிருப்பது அதிர்ஷ்டம்- வாஷிங்டன் சுந்தர்

டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஆன முதல் 6 ஓவருக்குள் பந்து வீசும் திறமையை பெற்றிருப்பது அதிர்ஷ்டம் என 18 வயது இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார். #NidahasTrophy

மாலை மலர்

வங்காள தேசத்தை 159 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. அவர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் விட்டுக்கள் கைப்பற்றினார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் பவர்பிளே ஓவருக்குள் வீழ்த்தி அசத்தினார். இந்த தொடரில் நான்கு போட்டிகளில் 16 ஓவர்கள் வீசியுள்ளார். இதில் 11 ஓவரை பவர்பிளேக்குள் வீசியது குறிப்பிடத்தக்கது.

3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற வாஷிங்டன் சுந்தர், பவர்பிளேயில் பந்து வீசும் திறமையை பெற்றிருப்பது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘பவர்பிளேயில் பந்து வீசுவது மிகவும் சவாலானது. நீங்கள் உங்களுடைய நாட்டிற்காக விளையாடும்போது இதேபோன்ற சவால்களை சந்தித்தாக வேண்டும். இந்த சவால்களில் வெற்றி பெறும்போது, ஏராளமான மனநிறைவு கிடைக்கும்.

பவர்பிளேயில் சிறப்பாக பந்து வீசும் திறமையை பெற்றிருப்பது அதிர்ஷ்டம். பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்துகளை சிக்சருக்கு தூக்கும் நோக்கத்தில் இருப்பதால் அவர்களுடைய மனநிலையை அறிவது மிகவும் முக்கியமானது. நான் ஒரு பேட்ஸ்மேன் என்பதால், பந்து வீசும்போது பேட்ஸ்மேன் என் மனநிலையில் இருக்கிறார் என்பதை என்னால் ஓரளவிற்கு அறிய முடியும்.