செய்திகள்

நிதாஹாஸ் முத்தரப்பு டி20- வங்காள தேசம் டாஸ் வென்று பவுலிங் தேர்வு

நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #Nidahas

மாலை மலர்

இலங்கையில் இந்தியா, இலங்கை, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவை இலங்கையும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை இந்தியாவும் வீழ்த்தியிருந்தன.

இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் இலங்கை - வங்காள தேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா பந்து வீசு்சு தேர்வு செய்துள்ளார்.

டாஸ் வென்ற மெஹ்முதுல்லா கூறுகையில் ‘‘ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ட்ரையாக காணப்படுகிறது. தற்போது வானிலை மழை பெய்வதுபோல் காணப்படுகிறது. நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறோம்’’ என்றார்.

இலங்கை கேப்டன் சண்டிமல் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதைத்தான் விரும்பினோம். அதேபோல் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

பவுண்டர் லைன் அருகே ஈரப்பதமாக இருப்பதால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.