செய்திகள்

முழங்கை காயத்தால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகினார் நிக் கிர்ஜியோஸ்

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான நிக் கிர்ஜியோஸ் முழங்கை காயத்தால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். #FrenchOpen

கடந்த சில வாரங்களாக கிர்ஜியோஸ் முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என உணர்ந்ததால் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.

போட்டியில் இருந்து வெளியேறிய கிர்ஜியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மன்னிகவும் ரசிகர்களே, நான் விளையாடுவதற்கு தயாரானேன். ஆனால், குறுகிய நேரம் மட்டுமே இங்கே வர முடிந்தது. துரதிருஷ்டவசமாக நான் பிரெஞ்ச் ஓபனில் இருந்து வெளியேறியுள்ளேன்.

SCROLL FOR NEXT