அதன்பின் இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. அப்போது நெய்மருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். இதனால் நெய்மர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி நெய்மரை நோக்கி அழுதுகொண்டே ஒடிவந்தான்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுவனை பிடித்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இதை கவனித்த நெய்மர், அந்த சிறுவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி தன்னுடன் அணைத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது அந்த சிறுவன் நெய்மரின் ஜெர்சியை பிடித்து ஜெர்சி வேண்டும் என சைகை காட்டினார். உடனே நெய்மர் ஜெர்சியை கழற்றி கொடுத்து அந்த சிறுவனை மகிழ்ச்சிப்படுத்தினார்.
Neymar... Making a kid's dream come true! ♥️ pic.twitter.com/fnhIocF52E