எம்எல்ஏவாக பதவியேற்ற பசவப்பா 
செய்திகள்

கர்நாடகா - புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்

கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை பதவியேற்றனர்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடகா சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின.

இந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை பதவியேற்றனர்.

கர்நாடகா மாநில சட்டசபை விதான் சவுதாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் விஷ்வேஷ்வரா ஹெக்டே உள்பட பலர் பங்கேற்றனர்.