செய்திகள்

பாகிஸ்தான் வேண்டுகோள் குறித்து ஆலோசிக்கிறது நியூசிலாந்து

தங்கள் நாட்டில் வந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோள் குறித்து நியூசிலாந்து ஆலோசித்து வருகிறது. #PAKvNZ

மாலை மலர்

இலங்கை அணி கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்ததால், உடனடியாக பாகிஸ்தானில் இருந்து சொந்த நாடு திரும்பியது. சுமார் 10 ஆண்டுகளாக எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்ற விளையாடவில்லை. ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொந்த நாட்டில் நடத்தியது. உலக லெவன் அணிக்கு எதிரான தொடரையும் நடத்தியது.

இந்நிலையில் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எங்கள் நாட்டில் வந்து விளையாடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியது. இந்த கடிதம் குறித்து ஆலோச்சி வருவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து இந்த வருடம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிர அரபு எமிரேட்சில் மூன்று போட்டிகள் கொண்ட் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. வீரர்களுக்கான பாதுகாப்பில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திருப்தியடைந்தால், பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்புள்ளது.

2003-ம் ஆண்டு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பாதுகாப்பு கருதி தொடரை ரத்து செய்தது.