செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

வெலிங்டன்:

நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெலிங்டன் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டி வெல்சன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 246 ரன்கள் எடுத்தது.

247 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய குப்தில்-வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து 47 ரன்கள் குவித்தார். 14 வது ஓவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது மழை குறுக்கீட்டதால் டக் வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. போட்டி 25 ஓவராக குறைக்கப்பட்டு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

19 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ரோஸ் டெய்லர் - குப்தில் ஜோடி சிறப்பாக ஆடினர். 23.5 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. #NZvPAK

SCROLL FOR NEXT