செய்திகள்

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #NZOpen #Badminton

மாலை மலர்

ஆக்லாந்து:

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் இலங்கையின் நிலுகா கருணாரடேனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இவர் 21-7, 27-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இவர் வருகின்ற சனிகிழமை நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் இந்தோனேசியா வீரர் ஜொனாதன் கிறிஸ்டேவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-19, 21-9 என்ற நேர்செட்டில் சீன வீரர் லின் டன்னிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி மற்றும் மனு அட்ரி ஜோடி தோல்வியடைந்தது.

இந்திய வீரர்கள் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய் பிரனீதை மட்டுமே நம்பி இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.  #NZOpen #Badminton