செய்திகள்

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறும்: புதிய துணைவேந்தர் தகவல்

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறும் என புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைகக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது. சென்னை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், பட்டமளிப்பு விழா நடைபெறுவது தாமதமானது.

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் செய்யப்பட்டனர்.

இத்தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்த சில மணி நேரங்களில், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக துரைசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.