செய்திகள்

2018 முதல் வாரத்தில் வெளியான ஸ்மார்ட்போன்கள்

2018 ஆங்கில புத்தாண்டின் முதல் வாரத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஸ்மார்ட்போன் சந்தையில் 2018-ம் ஆண்டின் முதல் வாரத்தில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றன. 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வைட் நிறத்தில் அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் போன்றே எல்ஜி நிறுவனமும் தனது எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனினை ரேஸ்ப்பெரி ரோஸ் நிறத்தில் அறிமுகம் செய்தது. 

இத்துடன் லண்டனில் ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் வியூ 10 மற்றும் ஹானர் 7X ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டின் முதல் வாரத்தில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பார்ப்போம். 


நோக்கியா 6 (2018) சிறப்பம்சங்கள்:


- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 

- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630

- அட்ரினோ 508 GPU

- 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆணட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட்

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0

- 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்

- கைரேகை ஸ்கேனர்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் புதிய ஸ்மார்ட்போனின் 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் 1499 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,655, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 1699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,610 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வைட் சிறப்பம்சங்கள்:


- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்

- அட்ரினோ 540 GPU

- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்

- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி 

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்

- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்

- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்

- கைரேகை ஸ்கேனர்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஜனவரி 9-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் விலை 559 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,404 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


ஹானர் வியூ 10 சிறப்பம்சங்கள்:


- 5.99 இன்ச் 2160x 1080 பிக்சல் ஃபுல் எச்டி+18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 பிராசஸர்

- மாலி G72 MP12 GPU

- 6 ஜிபி ரேம் 

- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி + 20 எம்பி டூயல் பிரைமரி கேமரா

- 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்

- 4ஜி வோல்ட்இ

- 3750 எம்ஏஎச் பேட்டரி

- ஃபாஸ்ட் சார்ஜிங்

முன்பக்கம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டிருக்கும் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் வியூ 10 விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


சாம்சங் கேலக்ஸி டேப் A 7.0 சிறப்பம்சங்கள்:


- 7.0 இன்ச் கேலக்ஸி டேப் A7.0 எச்டி ரெசல்யூஷன்

- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

- 1.5 ஜிபி ரேம்

- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு இயங்குதளம்

- 5 எம்பி பிரைமரி கேமரா

- 2 எம்பி செல்ஃபி கேமரா

- 4000 எம்ஏஎச் பேட்டரி

- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேலக்ஸி டேப் A 2017 சாதனத்தை ரூ.17,990க்கு வெளியிட்டது. 8.0 இன்ச் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

பிக்ஸ்பி ஹோம் சப்போர்ட், சாம்சங் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 8 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.


லெனோவோ K320t சிறப்பம்சங்கள்:


- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் எச்டி 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்

- 2 ஜிபி ரேம்

- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- டூயல் சிம் ஸ்லாட்

- 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்

- கைரேகை ஸ்கேனர்

- 4ஜி வோல்ட்இ

- 3000 எம்ஏஎச் பேட்டரி

கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் லெனோவோ K320t ஸ்மார்ட்போன் 999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,770 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


எல்ஜி வி30 ரேஸ்ப்பெரி ரோஸ் சிறப்பம்சங்கள்:


- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே

- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்

- அட்ரினோ 540 GPU

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி (வி30) / 128 ஜிபி (வி30 பிளஸ்) இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் மற்றும் எல்ஜி UX 6.0+

- 16 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி வோல்ட்இ

- 3,300 எம்.ஏ.எச். பேட்டரி

- குவால்காம் குவிக் சார்ஜ்

எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி30 ஸ்மார்ட்போன் அரோரா பிளாக், கிளவுட் சில்வர், மொரோக்கன் புளூ மற்றும் லேவண்டர் வைலட் நிறங்களில் வெளியிடப்பட்டது. புதிய ரேஸ்ப்பெரி ரோஸ் நிற ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.


மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் சிறப்பம்சங்கள்:


- 5.2 இன்ச், 2.5D வளைந்த கிளாஸ் 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே

- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

- 2 ஜிபி ரேம்

- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 5000 எம்ஏஎச் பேட்டரி

முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.  ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் பாரத் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,555 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.