செய்திகள்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற புதுமண தம்பதி

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த புதுமண தம்பதி ஜோசப்-ஷைனி பங்கேற்றனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பனிமய மாதா ஆலயத்தில் பொதுமக்கள் நேற்று போராட்டத்தை தொடங்கினர். அங்கு இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த புதுமண தம்பதி ஜோசப்-ஷைனி பங்கேற்றனர்.

அப்பகுதியில் உள்ள சின்னகோவில் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து, அங்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.