செய்திகள்

முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் திறப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் பங்கேற்பு

முதுகுளத்தூரில் புதிய அரசு கலை கல்லூரியின் கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ முருகன் பங்கேற்றார்.

மாலை மலர்

முதுகுளத்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 2012-13ல் தொடங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்நிலையில் முதுகுளத்தூரில் இருந்து 4.கி.மீ தூரத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் ரூ. 7.50 கோடி மதிப்பில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இந்தது.

இதனை முதல்வர் ஏடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் கல்லூரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலதாவின் திருவுருவ படத்திற்கு மாலை ஆணிவித்து மரியாதை செலுத்தி குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து அனைத்து பிரிவு வகுப்புகளையும் திறந்து வைத்தார்.

விழாவில் கல்லூரி முதல்வர் விமலா, பேராசிரியர் பாலமுருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைப்பாண்டி, அ.தி.மு.க. ஓன்றிய நிர்வாகி புளியங்குடி முத்துராமங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.