சாலை மறியல் 
செய்திகள்

பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி கறம்பக்குடியில் பொதுமக்கள் சாலை மறியல்

கறம்பக்குடி ஒன்றியத்துக்குட்பபட்ட பிலா விடுதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் கட்டிட விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்துக்குட்பபட்ட பிலா விடுதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் கட்டிட விரிவாக்கம் செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் கிராம மக்கள் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதில் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பள்ளி கட்டிடத்தை விரிவுபடுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும். அரசுக்கு உள்ள ஒரு ஏக்கர் இடத்தை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து கறம்பக்குடி தாசில்தார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.