காஷ்மீரில் ஊடுருவி நாசவேலை செய்ய முயன்ற பாகிஸ்தான் சிறப்பு படையை சேர்ந்த 7 பேரை நம் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வெள்ளைக் கொடியை ஏந்தி வந்து அவர்களின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டு இந்தி, கன்னட படங்களில் நடித்தவர் வீணா மாலிக். இந்தி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அவ்வப்போது ஆபாச படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.
அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்து டுவீட் போட்டுள்ளார். இந்திய ராணுவத்திற்கு ஆபாச சைகை காட்டி புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வீணா மாலிக்கை விளாசி தள்ளியுள்ளனர்.