செய்திகள்

நேபாள பாராளுமன்ற மேல்சபை தேர்தலிலும் இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி

கடந்தாண்டு நடந்த பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் அபார வெற்றி கண்ட இடதுசாரி கட்சிகளின் கூட்டணி பாராளுமன்ற மேல்சபை தேர்தலிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.#Nepal #Leftist

மாலை மலர்

மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

விரைவில் பிரதமராக சர்மா ஒலி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், பாராளுமன்ற மேல்சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. 6 மாகாணங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 59 இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது.

சர்மா ஒலி