ஆற்றுக்குள் விழுந்த பஸ் 
செய்திகள்

நேபாளம்: ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

நேபாளம் நாட்டின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் இன்று 34 பயணிகளுடன் சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.

மாலை மலர்

நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி 34 பயணிகளுடன் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு பஸ்  புறப்பட்டது.

சிந்துபால்சவுக் மாவட்டத்தின் சுக்குட்டே என்ற பகுதி வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சன்கோஷி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.