செய்திகள்

நெல்லூர் அருகே செம்மரம் வெட்டிய 25 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து ரூ.48 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி:

நெல்லூர் கதிரிநாயுடு வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வனத்துறையினரும் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

40-க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடியது.

போலீசார் அவர்களை விரட்டி மடக்கி பிடித்தனர். 25 பேரை கைது செய்தனர். மீதியுள்ளவர்கள் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து ரூ.48 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதான 25 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.