செய்திகள்

நெல்லித்தோப்பு பெரியார் நகரில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது

நெல்லித்தோப்பு பெரியார் நகரில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, அக்.10-

நெல்லித்தோப்பு பெரியார்நகரில் நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓடமுயன்றார். ஆனால் போலீசார் அந்த ரவுடியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் நெல்லித்தோப்பு பெரியார்நகர் முருகன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த பசுபதி (வயது24) என்பதும் ரவுடியான இவன் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பசுபதியை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT