அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 
செய்திகள்

நெல்லை, அனந்தபுரி ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நெல்லை, அனந்தபுரி ரெயில்கள் புறப்படும் நேரம் ஜூலை 1-ந்தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர்-குருவாயூர் (வண்டி எண்16127) தினசரி காலை 8.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.25 மணிக்கு புறப்படும். இதைப்போல எழும்பூர்-கொல்லம் (16723) தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும், எழும்பூர்-நெல்லை (12631) தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 7.50 மணிக்கும் புறப்படும்.

மேலும் எழும்பூர்-தஞ்சாவூர் (16865) தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கும், எழும்பூர்-சேலம் (22153) தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.45 மணிக்கும், செங்கல்பட்டு-கச்சிகுடா (17652) தினசரி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3.20 மணிக்கும் புறப்படும்.